தமிழகதத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணிராமதாஸ் கூறியுள்ளார்.
சிவகாசியில் தனியார் மருத்துவமனையை திறந்து வைக்க புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சிவகாசிப் பகுதியில் பிரதான தொழிலான பட்டாசுத்தொழில் நலிவடைந்து வருகிறது.சீனப்பட்டாசு இந்திய சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் நிர்மலாசீத்தாராமனை சந்தித்து மனு அளித்தேன்.
பின்னர் சீனபட்டாசுக்கு எதிரான நடவடிக்கை எடுத்தார்கள். தற்போது விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. எனவே இந்த ஆண்டும் மத்திய மாநில அரசுகள் சீனபட்டாசு விற்பனையை தடுத்து சிவகாசி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.இந்தியாவில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எந்தத்ததொழில்களையும் தமிழக அரசு ஊக்குவிப்பது கிடையாது.
அதிலும் தென்மாட்டங்களில் தொழில் பாதிப்பு அதிகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள தண்ணீரை பாதுகாக்க தனியே கட்சி சார்பற்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது. நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன். மாநில அரசு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது. அதன் பின்னர் அந்த திட்டத்தை யாரும் செயல்படுத்த வில்லை. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழ மக்களுக்காகவும், தமிழகத்திற்காகவும் எதுவும் செய்யவில்லை.
கர்நாடகா அரசு மேகதாது பகுதியில் ரூ 5900 கோடி மதிப்பீட்டில் புதிய அணைகட்டப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கு தமிழக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. திமுக ஆட்சியில் கர்னாடகா அரசு காவேரியில் மூன்று அணைகள் கட்டியது. அப்போது திமுக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இப்பிரச்சனைக்கு தமிழக அரசு அனைத்து கட்சியினர் கூட்டம் கூட்டி பேசி, பிரமதருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சீமைகருவேல் மரங்களை அழிக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. பின்னர் எந்த நடவடிக்கையும் கிடையாது.
ஜி.எஸ்.டி.மசோதா வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் அதனை செயல்படுத்த இன்னும் 14 மாநிலங்களில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. சட்டப்பேரவை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையமே நடத்தியது.
ஊள்ளாட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் நடத்தும். எந்தஅளவுக்கு முறையாக நடக்கும் என தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப்போட்டியிடும் என்றார் அன்புமணி ராமதாஸ். பேட்டியின் போது கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உடனிருந்தார்.

No comments:
Write comments