Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 4, 2016

சுவாதி கொலை வழக்கில் மீண்டும் விசாரணையில் பிலால்


சென்னை: சுவாதி கொலை வழக்கில் போலிஸார் அவரது நண்பர் முகமது பிலாலிடம் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் இரயில்வே நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் சுவாதியின் வழக்கு இன்னமும் இழுத்தடித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஜூன் 24ஆம் தேதி அவர் கொல்லப்பட்ட பிறகு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாகிப்போனது. அனுதினமும் சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு முன்னுக்கு பின் முரணாண செய்திகளும், அதே சமயம் இக்கொலையில் அரசியல் ஆதாயம் தேட பலரும் பல்வேறுவிதமான பிரச்சனைகளை கிளப்பி விட்டனர்.

இவ்வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச்சேர்ந்த ராம்குமார் என்பவரை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் சென்னை வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வரும் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையின தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் விடை தெரியாமல் இருக்கின்றது. உண்மை கொலையாளியை மறைக்க காவல்துறையினர் ராம்குமாரை பலிகாடாவாக ஆக்கிவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

அதேபோல் சுவாதி ஏற்கனவே ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டார் என்றும், அவர் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் கடைபிடிப்பது போல் நோன்பு வைத்தார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. எனவே இது கெளரவ கொலையாக கூட இருக்கலாம் என பலரும் சந்தேகிக்கின்றனர். சுவாதியின் நண்பரான முகமது பிலால் சித்திக் என்பவரிடம் ஏற்கனவே போலிஸார் பல முறை விசாரணை நடத்தியுள்ளனர். தற்போதும் அவரை அழைத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர்.

இவ்வழக்கை திசை திருப்பி உண்மையை மறைக்க காவல்துறையினர் முயன்று வருவதாகவும், எனவே இவ்வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென ராம்குமார் சார்பாக ஆஜராகிக்கொண்டிருக்கும் வக்கீல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சி.பி.ஐ விசாரணைக்கு குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருகும் ஒருவரின் வக்கீலே கோரிக்கை வைக்கும்போது இவ்வழக்கில் ராம்குமார் ஏற்கனவே கூறியதைபோன்று பலிகாடாவாக ஆக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகமும் வலுக்கிறது.

எனினும் உண்மையை பல நாட்கள் புதைத்து வைக்க முடியாது என்கிற ரீதியில், உண்மை குற்றவாளி யார் என்பது உலகிற்கு கண்டிப்பாக தெரியவரும் என்றே பலரும் கருதுகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic