திருச்சி சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்திருப்பதாவது, திருச்சி விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் ஓடுபாதையை விரிவுபடுத்த 510 ஏக்கர்கள் நிலம் தேவை. இதில் 370 ஏக்கர்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை சமர்பித்த பிறகு மீதமுள்ள நிலமும் கையகப்படுத்தப்படவுள்ளது. புதிய விரிவாக்க திட்டத்தை கையாளுவதற்கு ஒரு ஆலோசகரையும் நியமிக்க திட்டமிட்டுள்ளோம்.
விரிவாக்கப்பணிகளுக்கான டெண்டர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும் மார்ச் 2017ற்குள் விரிவாக்கப்பணிகள் துவங்கிவிடும் என எதிர்பார்கிறோம் என குணசேகரன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையம் ஒரு ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments