Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 16, 2016

குவாண்டனாமோ சிறையிலிருந்து இடம் கைதிகள் இடமாற்றம்


கியூபாவில் உள்ள குவாண்டனாமோ சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 15 குற்றவாளிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஒரேடியாக அதிகமான கைதிகள் மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். இதில் 12 பேர் ஏமன் நாட்டைச்சேர்ந்தவர்கள், 3 பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச்சேர்ந்தவர்கள். இந்த கைதிகளின் இடமாற்றத்தை குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குவாண்டனாமோ சிறைச்சாலையில் மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் நடந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு ஆண்டாண்டுகாலமாக இருந்து வருகிறது. இச்சிறைச்சாலையை மூடிவிட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்பினாலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சியினர் கடுமையாக இதனை எதிர்த்து வருகின்றனர். இதனால் ஒபாமா பலமுறை விரக்தியடைந்து கருத்து தெரிவித்திருக்கிறார்.\

அதே போன்று கியூபாவும் பல ஆண்டுகளாக தன்னுடைய சுதந்திர தந்தையாக திகழ்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ காலத்திலிருந்தே அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. இருந்த போதிலும் அமெரிக்காவின் சிறைச்சாலையான குவாண்டனாமோ சிறைச்சாலையை தனது நாட்டில் அனுமதித்திருப்பதும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கின்றது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic