Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

பயங்கரவாத்தை ஊக்குவிப்பவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முடியாது


பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என மத்திய அரசு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

கஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பயங்கரவாத செயல்களால் ஏற்படும் சவால்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இந்திய அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த காலங்களைப்போல் அல்லாமல் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிற்கு நாடாளுமன்ற கட்டிடம், சல்மா அணை, இலங்கையில் துரியப்பா மைதானம் கட்டுவது என அண்டை நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவின் சொத்து என குறிப்பிட்ட அவர், அவர்களை பாதுகாப்பதும் மத்திய அரசின் கடமை என தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic