Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

ஜி.எஸ்.டியில் திருத்தம் கொண்டுவரவேண்டும் - வணிகர் சங்கத்தலைவர்


ஜி.எஸ்.டி மசோதாவில் திருத்தம் கொண்டுவராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே வரிவிதிப்பை முறையாக கொண்ட ஜி.எஸ்.டி மசோதா பெரும்பாலான எதிர்கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து, மக்களவையிலும் எந்த தடையுமின்றி நிறைவேறியது. தமிழக அரசு மட்டும் இதை எதிர்த்து வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றால் மட்டுமே ஜி.எஸ்.டி மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்திற்காக கடையடைப்பு செய்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic