Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 7, 2016

ஒதுக்கப்பட்டதால் தான் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் - மனோகரி

கடந்த காலங்களில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டதின் விளைவாகவே அவர்கள் ஆயுதம் ஏந்து போராட துவங்கினர் என இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் ஆவண பொறுப்பாளர் மனோகிரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கை யாழ்பாணம் பகுதியில் நல்லிணக்கத்திற்காக மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட மனோகிரி செல்லத்துரை பேசும்போது "கடந்த காலங்களில் நாட்டில் உருவாக்கபப்ட்ட விகிதாச்சாரம் அடிப்படையிலான வாய்ப்புகளில் அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் பல்கலைகழகத்தில் படிக்கும் வாய்பு கிடைக்காமல் அவர்கள் ஒதுக்கப்பட்டதின் விளைவாகவே அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட துவங்கினர் என தெரிவித்தார்.

வடக்கு மாகாணங்களில் நிறுவப்பட்டிருக்கும் இராணுவத்தினரை அரசு திரும்ப பெற வேண்டும். ஏனினெனில் இராணுவ வீரர்கள் அங்குள்ள இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்குகின்றனர். அங்குள்ள தமிழர்கள் தங்களுடைய வீடுகளுக்குள்ளேயே இருந்து கொண்டு சிறைகளில் இருப்பது போலவே உணருகிறார்கள். அவர்களால் சுதந்திரமாக வாழ முடியவில்லை. தங்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்கு வெளியேவும் இராணுவம் நின்று கொண்டு மக்களின் நடவடிக்கைகளை கண்காணித்து கொண்டிருக்கிறது. இதனால் அவர்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே கடைக்கு ஏதாவது வாங்கச்சென்றால் கூட எங்கு போகிறீர்கள்? எதற்காக போகிறீர்கள்? என இராணுவத்தினர் கேள்விகளால் துழைத்தெடுக்கின்றனர். எனவே அம்மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் அங்குள்ள இராணுவத்தினரை திரும்ப பெற வேண்டும் இவ்வாறு மனோகிரி தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic