Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 20, 2016

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனர் உர்ஜித் படேல்




ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுனராக இருந்து வரும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைவதையொட்டி புதிய ஆளுனராக உர்ஜித் படேல் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உர்ஜித் படலே பிரபல பொருளாதார வல்லுனர்களில் ஒருவராவார். லண்டன் பல்கலைகழகத்தின் ஒரு பிரிவாக செயல்படும் லண்டன் ஸ்கூல் ஒஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பி.ஏ பட்டம் பெற்றவர். உலகின் பிரபல பல்கலைகழங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டில் 1986ஆம் ஆண்டும் எம்.பில் பட்டமும், மற்றொரு பல்கலைக்கழகமான யேலில் 1990ஆம் ஆண்டு பொருளாதார பிரிவில் டாக்கடர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

அதன்பிறகு, சர்வதேச நிதியத்துடண் இணைந்து அமெரிக்கா, இந்தியா, பகாமாஸ், மியான்மர் நாடுகளில் பணியாற்றியவர். பிறகு மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரத்துறையின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இதுதவிர, பல்வேறு அரசு உயர்மட்ட பொறுப்புக்களி்ல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2013-ம் ஆண்டு உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இவர் வகித்த முக்கிய உயர் பொறுப்புக்களில் எம்.சி.எக்ஸ் எனப்படும் இந்திய பொருட்சந்தையின் இயக்குனர்களில் ஒருவராகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic