Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 22, 2016

வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து!


வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற புறக்கணிப்பு, கோர்ட் முற்றுகை என பல போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து 125 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், சட்ட திருத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஐகோர்ட் அறிவித்தது. தொடர்ந்து தங்களது போராட்டத்தை வழக்கறிஞர்கள் நிறுத்தி வைத்தனர். அகில இந்திய பார் கவுன்சிலுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் வழக்கறிஞர்கள் அனைத்து போராட்டத்தையும் கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


இந்நிலையில், தமிழக பார் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று, 125 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதாக அகில இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழக பார் கவுன்சில் தனது அறிக்கையில், நீதிமன்ற பணிகள் சுமூகமாக நடக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களால் பிரச்னை ஏதுமில்லை எனக்கூறியிருந்தது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic