பிதமரின் மவுனம் மிகுந்த வேதனை அளிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பங்கெடுத்த தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் கலந்து கொண்டு தேசியக்கொடு ஏற்றிவைத்தார். பின்னர் உரையாற்றிய தாக்கூர் கூறூம்போது "இந்தியா முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 2 கோடிக்கும் அதிகமான வழக்குகள் விசாரணை நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நீதிபதிகளின் பற்றாக்குறையே.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் எத்துனையோ முறை கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டேன். ஆனால் இது தொடர்பாக பிரதமர் மோடியின் மவுனம் மன வேதனையை தருகிறது. அவரின் சுதந்திர தின உரையில் நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக எந்த ஒரு கருத்தும் இடம்பெறாதது ஏமாற்றத்தை தருகிறது. தீர்ப்புகளுக்காக காத்திருக்கும் மக்கள் பத்தி பிரதமர் சிந்திக்க வேண்டும்" என தாக்கூர் பேசினார்.
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து தலைமை நீதிபதி கவுல் பேசுகையில், வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒத்துழையாமை கருத்துடன் செயல்படுவது நீதித்துறையின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. கோர்ட்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இழந்து விடாத அளவிற்கு நாம் செயல்பட வேண்டும் எனக்கூறினார்.

No comments:
Write comments