சுதந்திரதினத்தை முன்னிட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் வந்த ராகுல் காந்தியை பார்க்கும்போது கட்சிக்காரர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து போயினர். காரணம் ராஜீவ் காந்தியைப்போலவே உடை அணிந்து வந்தார் ராகுல்.
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் உள்ள தேசிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வெள்ளை நிற ஆடையும் வெள்ளை நிர தொப்பியும் அணிந்தவாரு ராகுல் காந்தி அலுவலக வளாகத்திற்குள் நுழைந்த போது அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர். காரணம் அவரை பாக்கும்போது ராஜீவ் காந்தியை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
பின்னர் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றிய ராகுல் காந்தி கூறும்போது " நாம் கடந்த 70 ஆண்டுகளில் நிறையவே சாத்திருக்கிறோம். இருப்பினும் இன்னும் அதிக பணிகள் நம்முன் இருக்கின்றது. நமது சுதந்திரம் கடுமையான போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது. சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் தற்போது நம்முன் இல்லை. இருப்பினும் அவர்கள் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் நம்முன் இருக்கிறது. அது நம்மை கடைசி வரை வழி நடத்திக்கொண்டே இருக்கும்.
சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமானதல்ல, அனைவருக்குமானது. நாட்டில் அனைவருக்கு பயமின்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவது இந்தியர்களாகிய நமது கடமையாகும். பிரிவினை மற்றும் அடக்குமுறை அமைப்புகளுக்கு அடிபணியாமல், நமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். உண்மைக்காக எப்போதும் போராட வேண்டும்" என ராகுல் காந்தி பேசினார்.

No comments:
Write comments