முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவைப்போலவே அதிபர் ஸ்ரீசேனா தலைமையிலான அரசும் தமிழர் விரோத போக்கில் ஈடுபடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மல நாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை பாரளுமன்றத்தில் குறிப்பிட்ட சில விசயங்கள் தொடர்பாக கேள்வி எழும்பியபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சார்லஸ் கூறும்போது "முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆட்சியைப்போலவே தமிழர்களுக்கெதிரான நடவடிக்கையில் தற்போதைய அரசும் ஈடுபட்டு வருகிறது. வடக்கு மாகாணத்தில் தமிழர்களை மீண்டும் குடியேற்றுவதற்காக அரசு தரப்பில் ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழுவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சேர்க்கப்படவில்லை." என அவர் தெரிவித்தார்.
இந்த குழுவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இடம்பெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம். மற்ற அமைச்சர்களுடன் முதலமைச்சரும் இடம்பெற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. இவர் இடம்பெறாத குழு எந்தளவிற்கு உண்மையான அறிக்கையை வெளிக்கொண்டு வரும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. பிரதமர் ரணில் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். இக்குழுவில் அங்கம் வகிக்கின்ற வடக்கு மாகாண அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடந்த காலத்தில் ராஜபக்சேவின் மகன் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர். கடந்த ஆட்சியில் நீதிமன்றத்தின் மீது கல்லெறிந்தது மட்டுமல்லாமல், நீதிபதிகளை தொலைபேசியில் மிரட்டியவர். அவருக்கு எதிராக வழக்குகள் கூட நிலுவையில் இருக்கிறது. அப்பேற்பட்டவரை குழுவில் இணைத்திருப்பதை பார்த்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது வடக்கு மாகாண மக்களுக்கு எதிராக செய்யப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். நீங்கள் உண்மையிலேயே நல்லாட்சிதான் நடத்துகிறீர்கள் என்றால் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அந்த குழுவில் இணைக்க வேஎன்டும். " என கூறினார்.

ராஜபக்ஷேவும் ஸ்ரீசேனாவும் ஒன்னு!
ReplyDeleteஇதை அறியாதவங்க வாயில மண்ணு!