2ஜி வழக்கு மற்றும் சாதிக் பாட்சா கொலை சம்பந்தமாக பிரபாகரனிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். பிராபகரன் கடந்த மே மாதம் 17ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தான் கடந்த 2011 ஆம் ஆண்டு சாதிக் பாட்சாவை கொன்றதாகவும், அதற்கு முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரி உடந்தையாக இருந்ததாகவும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டான்.
2ஜி வழக்கில் அப்போதையை மத்திய அமைச்சரான ஆ.ராஜாவிற்கு எதிராக பல முக்கிய தகவல்களை சி.பி.ஐ அதிகாரியிடம் சாதிக் பாட்சா தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்தே அவர் கொலை செய்யப்பட்டார். சி.பி.ஐ அதிகாரிகள் இக்கொலைக்கு காரணமான பிரபாகரனை எவ்வளவோ கண்டு பிடிக்க முயற்ச்சித்தும் இதுவரை பிரபாகரன் சிக்கவில்லை. இவ்வழக்கில் காவல்துறையினர் சரியான முறையில் தங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், பிரபாகரன் ஒரு மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினரே கூறி வருவதாக சி.பி.ஐ அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
எனவே 2ஜி வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் பிராபகரன் பிடிபட்டால் 2ஜி வழக்கை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும், சாதிக் பாட்சா கொலை வழக்கை தனியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிராபகரனை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் சி.பி.ஐ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Write comments