Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 31, 2016

ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனையை எதிர்பார்க்கும் உள்துறை அமைச்சகம்!


புதுடெல்லி: சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர நாயக் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட ஆலோசனையை எதிர்பார்த்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவின் மும்பையில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் பிரபல இஸ்லாமிய மதபோதகர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். அவரது பேச்சுக்கள் வன்முறையை தூண்டும்விதமாக இருப்பதாகவும், மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும், தீவிரவாதிகளுக்கு உந்து சக்தியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனை தொடர்ந்து வங்கதேசத்தில் ஜாகிர் நாயக் நடத்தி வரும் பீஸ் தொலைக்காட்சிக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது. எனினும் அவரை கைது செய்ய வேண்டுமெனவும், அவருடைய அரகட்டளையான ஐ.எஆர்.எஃப் மற்றும் பீஸ் தொலைக்காட்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வந்தது. அவருடய பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை ஆய்வு செய்த பின்னர் மும்பை காவல்துறையினர் தங்களுடைய அறிக்கையை மகாராஷ்டிரா அரசிடம் சமர்பித்தனர். பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகாராஷ்டிரா அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

அவர் மீது தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. அவரது பேச்சுக்களில் பல வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. "எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும்" என அவர் கூறிய கருத்துக்கள் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாகவும். அதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic