Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 2, 2016

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க நரசிங்யாதவிற்கு வாய்ப்பு


இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், 26. டில்லி காமன்வெல்த்தில் (2010) தங்கம், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றவர். 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கி.கி., பிரிவு) வெண்கலம் வென்று, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு (ஆக.,5-21) நேரடியாக தகுதி பெற்றார்.

கடந்த ஜூன் 25ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில், தடை செய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது 'ஏ, பி' என இரு மாதிரிகளிலும் உறுதியானது.இவருக்குப் பதில் மாற்று வீரராக பிரவீண் ராணா (74 கி.கி.,) தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே டில்லி, தேசிய ஊக்க மருந்து சோதனை அமைப்பு ('நாடா') நரசிங் யாதவ் பிரச்னை குறித்து 2 நாட்கள் விசாரணை நடத்தியது. தனது உணவில் சக 'ஜூனியர்' வீரர் ஒருவர் தடை செய்யப்பட்ட மருந்தை கலந்து விட்டதாக வாதாடினார்.

இதனிடையே நர்சிங் யாதவ் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய, தலைவர் நவின் அகர்வால் தலைமையில், சில நாட்களுக்கு முன் பல மணி நேரம் 'நாடா' கூட்டம் நடந்தது.முடிவில் தீர்ப்பு எதுவும் கூறமால் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று முடிவு கூறப்பட்டது. அதில்,'நர்சிங் யாதவ் யாரோ ஒருவர் செய்த சதியால் பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின் பலனை நரசிங் யாதவுக்கு சாகதமாக வழங்கி, ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறார்,'என, தெரிவிக்கப்பட்டது

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic