தலித் சமூகத்தின் பேரியக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச்செயலாளர்கள் இடையே வெளிப்படையாகவே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருபவர் ரவிக்குமார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அடுத்தபடியாக கட்சியில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வருபவர். கடந்த சில நாட்களாக பா.ஜ.க தலைவர்களை வெகுவாக புகழ்ந்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவு செய்து வருவதால் கட்சியினருக்குள்ளேயே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் தருண் விஜய் திருவள்ளுவர் சிலையை வட மாநிலத்தில் நிறுவிய விவகாரத்திலும், மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வேண்டுமானால் என்னை கொல்லுங்கள் என பேசிய பிரதமர் மோடியையும் வெகுவாக புகழ்ந்து கருத்து தெரிவித்திருக்கிறார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருந்து வரும் ஆளூர் ஷானவாஸ் கடுமையாக எதிர்த்து வருகிறார். மோடி எந்தவிதமான கருத்துக்களை வெளியிட்டாலும் அவரை பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் என்பது உலகறிந்த விஷயமாகும். அப்படியிருக்க கட்சியின் பொதுச்செயலாளர் இவ்வாறு பாராட்டுவது கட்சியின் நம்பகத்தன்மையை சீர்குழைத்துவிடும். இவ்விவகாரத்தில் கட்சியில் நிலைபாடு என்ன என்பதை பகிர்ங்கமாக தலைவர் தெரிவிக்க வேண்டுமென் திருமாவளவனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தான் பேசியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை என ரவிக்குமாரும் பதிலுக்கு தெரிவித்திருக்கிறார். இத்தகைய மோதல்கள் பெரும் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி திருமாவளவனின் பிறந்த தினத்தை முன்னிட்டு சாதி வெறிக்கு எதிராக மாநாட்டை நடத்த அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில் இவ்விவகாரம் திருமாவளவனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments