நமது நாடு வளர்ச்சி அடையாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்திரபிரதேசம் லக்னோவின் புற நகர் பகுதியான ககோரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த அமித்ஷா பேசும்போது "நாடு விடுதலை அடைந்து சுமார் 60 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினரின் ஆட்சி நடைபெற்றதால்தான் வளர்ச்சி என்பது இலாமலேயே போய்விட்டது. நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் மாநிலங்கள் வளர்ச்சி அடைய வேண்டும்" என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
விடுதலை பெற்று 70 ஆண்டுகள் கழிந்தோடிவிட்டது. ஆனால் நாட்டில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. காரணம் ஒரே குடும்பம் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இதனைக்கூறும்போது நான் வருந்துகிறேன். ஆட்ச்சிக்கட்டிலில் காங்கிரஸ் அன்று இருந்தது. தற்போது அதன் விளைவுகளை நம் முன்னே கண்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
விரைவில் நடக்க விருக்கும் உத்திரபிரதேச தேர்தலை மனதில் வைத்து பேசிய அமித்ஷா " உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ ஆட்சிக்கு வந்தா அவர்கள் குறிப்பிட்ட சமுதாயத்தின் நலனிலேயே அக்கறை செலுத்துவார்கள். பா.ஜ.க மட்டுமே அனைத்து தரப்பினரின் வளர்சிக்கும் உழைக்கும். உத்திரபிரதேசத்தின் வளர்ச்சி இல்லாமல் நாடு முன்னேற்ற பாதையில் செல்ல முடியாது. கிராமங்களில் மின்சாரம் இல்லை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை, வேளான் நிலங்கள் பயிர் செய்வதற்கான வசதிகள் இல்லாமல் கிடக்கிறது. மருந்துகள் இல்லாமல் ஏழைகள் இறந்து கொண்டிருக்கின்றன" என அமித்ஷா கூறினார்.

No comments:
Write comments