சிவாஜிகணேசன் சிலையை கடற்கரையில் இருந்து அகற்ற வேண்டும் என்பது அரசின் முடிவல்ல, உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்று சட்டசபையில் தி.மு.க உறுப்பினருக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.
தமிழக சட்டசபையில் தி.மு.க உறுப்பினர் சந்திரசேகர் கூறும்போது,
சிவாஜிகணேசன் சிலை கடற்கரையிலேயே நீடிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலை தற்போது இருக்கின்ற இடத்தைவிட்டு மாற்ற வேண்டுமென்பது இந்த அரசின் விருப்பம் அல்ல. அது நீதிமன்றத்தின் உத்தரவு. அதை அகற்றியே ஆக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.
தீர்ப்பளித்துவிட்டு, திரும்பத் திரும்ப அரசை அழைத்து, இன்னும் ஏன் அதை அகற்றவில்லை என்று உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆகவே, சிவாஜி கணேசனுக்காக அவர் நினைவைப் போற்றும் வகையில், ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்படும் என்று ஏற்கெனவே இந்த அவையில் நான் அறிவித்திருக்கிறேன். அந்த நினைவு மண்டபம் கட்டி முடிக்கும்போது, சிலை அங்கே மாற்றப்படும் என்று சொல்லித்தான் உயர் நீதிமன்றத்தை சமாதானப் படுத்தியிருக்கிறோம். ஆகவே, அது இந்த அரசின் விருப்பம் அல்ல. நீதிமன்றத்தின் உத்தரவு என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அரசின் முடிவின் அடிப்படையில் மாற்றம் செய்யலாமே என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா , திரைப்படத் துறையைப்பற்றியும், நடிப்பைப்பற்றியும் தெரிந்த அளவிற்கு, சட்டத்தைப்பற்றி அவருக்குத் தெரியவில்லை போல் தெரிகிறது. ஆகவே, அவர் வேண்டுமென்றால், உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு போட்டு, சிலை அங்கேயே நீட்டிக்க அனுமதி பெற்றால், அதைச் செய்ய நாங்கள் தயார். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:
Write comments