Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 16, 2016

துருக்கி கிளர்ச்சிக்கு காரணமான மத போதகருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


துருக்கியில் ஏற்பட்ட திடீர் இராணுவ புரட்சிக்கு தூண்டுதலாக இருந்த மதபோதகர் பெதுல்லா குலெனுக்கு துருக்கி அரசு இரட்டை ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது.

துருக்கி நாட்டில் அதிபர் எர்டகோன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக இராணுவத்தின் சில பிரிவினர்கள் கடந்த ஜூன் மாதம் கிளர்ச்சியை ஏற்படுத்தினர். எனினும் அதிபர் எர்டகோனுக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் இருந்ததால் அக்கிளர்ச்சி உடனடியாக மக்கள் உதவியுடன் முறியடிக்கப்பட்டது. இந்த புரட்சிக்கு பின்னனியாக இருந்து செயல்பட்டவர் பெதுல்லா குலன் தான் என துருக்கி அரசு குற்றஞ்சாட்டியது.

பெதுல்லா குலன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதால், அவருடைய ஆதரவாளர்களாக இருந்து கொண்டு புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள், காவல்துறையினர், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அனைவரையும் துருக்கி அதிபர் எர்டகோனின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது வரை 35ஆயிரத்திற்குமேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளன. அதில் 11ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்த பின்பு விடுதலை செய்துள்ளனர். இந்நிலையில் கிளர்ச்சிக்கு தூண்டிய மத போதகர் பெதுல்லா குலன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர் மீது இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்தான்புல் நகரில் உள்ள 44 முக்கிய நிறுவனங்களில் துருக்கி போலீசார் இன்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இராணுவ புரட்சி தொடர்பாக நிறுவனங்களின் நிர்வாகிகள் 120 பேரை விசாரணை மேற்கொள்ள போலீசார் வாரண்ட் பெற்றிருந்தனர். மத போதகர் பெதுல்லா குலெனுக்கு மறைமுகமாக நிதியுதவி அளித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே இஸ்தான்புல் நகரில் உள்ள 3 முக்கிய கோர்ட்டுகளில் துருக்கி போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic