Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 15, 2016

குஜராத் அரசை எச்சரிக்கும் தலித் சமுதாய மக்கள்


தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் இன்னும் ஒரு மாதத்திற்குள் இரயில் மறியல் போராட்டம் நடத்தபப்டும் என தலித் அமைப்புகள் எச்சரித்துள்ளது.

குஜராத் மாநிலம் உனா மாவட்டத்தில் தலித் இளைஞர்கள் மாட்டிறைச்சி விவகாரத்தில் தாக்கபப்ட்டதை தொடர்ந்து அங்கு பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்பிரச்சனையில் குஜராத் மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அம்மாநில முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இன்று காலை ஆயிரக்கணக்கான தலித்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞராக இருந்து பின்னர் சமூக சேவைகளில் ஈடுபட துவங்கிய ஜிக்னேஷ் மேவானி கூறும்போது "தலித் சமூகத்தைச்சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தலா 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குஜராத் சட்டசபையில் விவாதம் நடத்துமாற்று கோரியிருந்தோம். ஆனால் இது வரை அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஹர்திக் படேல் அவரது சமூக மக்களுக்காக 7 மாதம் சிறை சென்றார் என்றால் என்னால் தலித் சமுதாயத்திற்காக தேவைப்பட்டால் 27 மாதங்களுக்கு கூட சிறை செல்வேன். அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்கினால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.


படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 6 மாதங்களுக்கு குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையோடு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தலித்கள் நடத்திய இந்த போராட்டத்தில் ஐதராபாத் பல்கலைகழகத்தில் தற்கொலை செய்து கொன்ட ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலாவும் கலந்து கொண்டார். இந்திய என்பது எல்லோருக்கும் சொந்தமான நாடாகும். இது ஒரு சாதியினருக்கோ அல்லது ஒரு மதத்தினருக்கோ சொந்தமானது அல்ல என ராதிகா தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு பலகலைகழக மாணவர் பேரவையி தலைவர் கன்ஹையா குமாரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic