Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 31, 2016

டெங்கு: திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!


திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் ஊராட்சியில் இதுவரை 114 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். திருவாலங்காடு ஒன்றியத்தில் 121 பேர், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் 180 பேர், திருத்தணி ஒன்றியத்தில் 122 பேர், மீஞ்சூர் ஒன்றியத்தில் 66 பேர் என மொத்தம் 603 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 7 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் பலியாகியுள்ளனர். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டெங்குவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றார்.
பேரவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாபாஸ்கர், திருவள்ளுர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் போர்க்கால நடவடிக்கையால் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்றும், கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு நோய் பரவாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் விளக்கமளித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic