Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 31, 2016

ஊழலை ஒழிக்குமா புதிய சட்டம்?


ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சுதந்திர காலம் தொடங்கி, இன்று வரை இந்திய அரசியல் தலைவர்கள்பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சாதாரண அரசு மருத்துவமனையில், ஒரு படுக்கையில் ஆரம்பிக்கும்ஊழல் சுரங்கப் படுகைகளை பங்கிட்டுக் கொள்வதுவரை தலைவிரித்தாடுகிறது. இந்த ஊழல்களையெல்லாம்தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததோடு, ஊழல் தடுப்புச் சட்டத்தையும் நிறைவேற்றியது.ஆனால் அந்தச் சட்டம் ஊழலைத் தடுக்க போதுமானதாக இல்லை. அதனால், ஊழல் தடுப்புச் சட்டத்தில்திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, புதிய ஊழல் தடுப்பு திருத்தச்சட்டம் குறித்து மத்திய சட்ட ஆணையம் அறிக்கையளித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றமாநிலங்களவை ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இக்குழு மத்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி தனது பரிந்துரையை சமர்ப்பித்தது.புதிதாக சேர்ந்திருக்கும் சட்ட விதிகளின்படி, ஒரு அரசு ஊழியர் தன் பணியைச் செய்துமுடிக்க ஊதியத்தைத்தவிர வேறு எதையும் பெற்றுக்கொள்வது ஊழலாகவும், லஞ்சமாகவும் கருதப்படும் என்ற விளக்கத்தோடுதொடங்கும் இந்த சட்டத் திருத்தம், மிக முக்கியமாக ஒன்றை சுட்டிக் காட்டுகிறது. வேலையை முடித்துக்கொடுக்க பாலியல்ரீதியாக பெண்களை இணங்கச் சொல்வது, வேலையில் நிமித்தம் உறவை ஏற்படுத்திக்கொள்வதையும்கூட ஊழல் என்கிறது இந்தச் சட்டம். சுதந்திர இந்தியாவில் பாலியல் சீண்டலை இத்தனைஅரசியல் பொருளோடு உணர்த்த சட்ட ஷரத்துகள் மிகக் குறைவே எனும்நிலையில், இந்த சட்ட மசோதாபாலியல்ரீதியான எதிர்பார்ப்புகளுக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கலாம் என பரிந்துரைக்கிறது. இந்தச்சட்டம் வெறும் அரசு ஊழியர்களை மட்டுமல்ல; தனியார் துறையையும் உள்வாங்கிஉருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த சட்டத் திருத்தத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களையும், அதன் நிர்வாக அதிகாரிகளையும்கூட சேர்க்கவேண்டும் என்று நாடாளுமன்ற ஆய்வுக் குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன்,லஞ்சம் பெறுபவர் மட்டுமன்றி லஞ்சம் கொடுப்பவரையும் தண்டிக்கும்வகையில் சட்டத் திருத்தம் இருக்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
லஞ்சமும், ஊழலும் பெருநோய்கள். அது, இந்த சமூகத்தின் பெரிய மனிதர்களை மட்டுமல்ல; அடித்தட்டுஏழைகளையே முதலில் பலிகொள்கிறது. தங்கள் வாழ்வில் வழங்கப்படும் சின்னச்சின்ன உரிமைகளைக்கூடஅது தட்டிப் பறித்துவிடுகிறது. இந்தச் சட்டம், சாதாரண இந்தியனுக்கு அந்த உரிமையை வழங்கும் என்றால்,அதுதான் இந்தச் சட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படும்.
ஊழல் ஒழிப்பு சட்ட வரலாறு
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, 1947ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல்தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. மக்கள் தங்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சிக்குவந்தால் அனைத்துவிதமான ஊழல்களும் காணாமல் போகும் என்றார்கள் காங்கிரஸார். இந்தச்சட்டத்தோடு நின்றுவிடாமல் அரசுத் துறைகளில் ஊழலை ஒழிக்கும்வகையில் 1941லேயே The Special Police Establishment என்ற ஓர் அமைப்புகூட ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்தச் சட்டங்களால் ஊழல்களைஒழிக்கவும் முடியவில்லை. கட்டுப்படுத்தவும் முடியவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளைக்கடந்துவிட்டபோதும் ஊழலும் அதன் எண்ணிக்கையின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறதேதவிர, குறைந்தபாடில்லை. மிக எளிமையான வாழ்வை வாழ வேண்டும் என்று கோரிய காந்தியின்சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட்டு பெரும் கோடீஸ்வரர்கள் தங்களின் சொத்துகளையும் நிறுவனங்களையும்பாதுகாத்துக் கொள்ள அரசியலுக்கு வந்தனர். அரசியல் என்பதே தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான கருவி என்று புரிந்துகொண்டனர்.
1991ஆம் ஆண்டு, தனியார் தாராளமய பட்ஜெட் தாக்கலான பின்னர் தனியார் துறையும் அரசியல்வாதிகளும்உச்சகட்ட அதிகாரிகளோடு இணைந்து பயணித்தனர். ஊழல்கள் அதன்பின்னர்தான் பெருகியது. பழையஊழல்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கி, புதிய ஊழல்கள் நம்மை வியக்கவைத்தன. இன்றைய இளம்தலைமுறையினர் இந்த ஊழல்களில் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் வளர்ச்சியை நோக்கிய பயணத்தைஎதிர்பார்க்கும் ஒரு தருணத்தில், இந்த மசோதாவை தாக்கல்செய்ய இருப்பது வரவேற்கத்தக்க அம்சம்.சட்டம் எத்தனை கடுமையாக இருந்தபோதிலும், அதை நிறைவேற்றுகிறவர்கள் யார் என்பதைப் பொறுத்தேஅதன் நோக்கங்களும் நிறைவேறும். அந்தவகையில், ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுகிறவர்கள்நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் நடந்த ஊழல்கள்
1. 1987 போஃபர்ஸ் ஊழல், பேர்பாக்ஸ் ஊழல் - ரூ.260 கோடி
2. 1992 ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் - ரூ.5,000 கோடி
3. 1994 சர்க்கரை இறக்குமதி ஊழல் - ரூ.650 கோடி
4. 1995 பிரபரன்சியல் அபார்ட்மென்ட் ஊழல் ரூ.5,000 கோடி
5. 1995 யூகோய்லேவ் டைனர் ஊழல் - ரூ.400 கோடி
6. 1995 காஸ்லாவ் விருந்து ஊழல் - ரூ.400 கோடி
7. 1995 மேகாலயா வன ஊழல் - ரூ.300 கோடி
8. 1996 உர இறக்குமதி ஊழல் - ரூ.1,300 கோடி
9. 1996 யூரியா ஊழல் - ரூ.133 கோடி
10. 1996 பீகார் மாட்டுத் தீவன ஊழல் - ரூ.990 கோடி
11. 1997 சுக்ராம் டெலிகாம் ஊழல் - ரூ.1,500 கோடி
12. 1997 எஸ்.என்.சி. லாவலைன் மின்சாரத் திட்ட ஊழல் - ரூ.374 கோடி
13. 1997 பீகார் நில ஊழல் - ரூ.400 கோடி
14. 1997 சி.ஆர்.பான்சால் பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ.1,200 கோடி
15. 1998 தேக்கு மர வளர்ப்பு ஊழல் - ரூ.8,000 கோடி
16. 2001 யு.டி.ஐ. ஊழல் - ரூ.4,800 கோடி
17. 2001 தினேஸ் டால்மியா பங்கு மார்க்கெட் ஊழல் - ரூ.595 கோடி
18. 2001 கேதான் பரேக் செக்யூரிட்டி ஊழல் - ரூ.1,250 கோடி
19. 2001 வீரேத்திர ரஸ்ட்டதி உலகளவில் ஊழல் - ரூ.1 பில்லியன் வரை
20. 2002 சஞ்சய் அகர்வால் ஹோமிராடு ஊழல் - ரூ.600 கோடி
21. 2003 டெல்க்கி பத்திர பேர ஊழல் - ரூ.172 கோடி
22. 2003 பிரமோத் மகாஜன் - டாடா விஎஸ்என்எல் ஊழல் - ரூ.1,200 கோடி
23. 2005 ஐ.பி.ஓ.டி. மாட் ஊழல் - ரூ.146 கோடி
24. 2005 பீகார் வெள்ள நிவாரண ஊழல் - ரூ.17 கோடி
25. 2005 ஸ்கார்பென் சப்மைரின் ஊழல் - ரூ.18,979 கோடி
26. 2006 பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல் - ரூ.1,500 கோடி
27. 2006 தாஸ்காரிடார் ஊழல் - ரூ.175 கோடி
28. 2008 பூனே பில்லியனர் ஜெகன் அலிகான் வரி ஏய்ப்பு ஊழல் - ரூ.50,000 கோடி
29. 2008 சத்யம் ஊழல் - ரூ.10,000 கோடி
30. 2008 ரிலையன்ஸ் பங்கு விற்பனை ஊழல் - ரூ.513 கோடி
31. 2008 ராணுவ ரேஷன் ஊழல் - ரூ.5,000 கோடி
32. 2008 ஸ்டேட் பாங்க் ஆஃப் சௌராஷ்டிரா ஊழல் - ரூ.95 கோடி
33. 2009 ஜார்க்கண்ட் மருத்துவ சாதனங்கள் ஊழல் - ரூ.130 கோடி
34. 2009 அரிசி ஏற்றுமதி ஊழல் - ரூ.2,500 கோடி
35. 2009 ஒடிசா சுரங்க ஊழல் - ரூ.7,000 கோடி
36. 2009 மதுகோடா சுரங்க ஊழல் - ரூ.37,000 கோடி
37. 2011 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ. 1,76,000 கோடி.
38. 2012 வக்ஃபு வாரிய நிலமோசடி ஊழல் - ரூ. 2,00,000 கோடி
39. 2012 இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு ஊழல் - ரூ.1,85,591 கோடி
40. 2012 உத்திரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் ஊழல் - ரூ.10,000 கோடி
41. ஹவாலா நிதி முறைகேட்டில் 18 மில்லியன் டாலர் ஊழல் 42. தங்க நாற்கரச் சாலை அமைக்கும்திட்டத்தில் நில மோசடியில் 100 மில்லியன் டாலர் ஊழல்.
43. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்கரியும்,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சரத்பவாரும்சம்பந்தப்பட்ட பாசனக் கால்வாய் திட்ட மோசடியில் ரூ. 75,000 கோடி ஊழல்.
44. கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக இருந்த எடியூரப்பா இரும்புத் தாது வெட்டிஎடுப்பதில் ரூ.50 கோடி ஊழல்.
45. கோவாவில் பாரதிய ஜனதா கட்சி முதல்வர் பணிக்கர் அரசின் இரும்புத் தாது ஊழல் ரூ.25 கோடி ஊழல்.
46. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அர்ஜுன் முண்டா மற்றும் மதுகோடாவின் கனிம ஊழல் ரூ.37,000 கோடி ஊழல்.
47. சத்தீஸ்கரில் கனிம வளங்களை வெட்டியெடுக்க ஒப்பந்தம் வழங்குவதில் மற்றும் மின் திட்டங்களில்ராமன்சிங் அரசு செய்த முறைகேடு ரூ.40,000 கோடி ஊழல்.
48. கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள், கனிம வளங்கள் வெட்டியெடுப்பதற்கு ஆதரவாகச் செயல்பட்டமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெற்றது ரூ.1,500 கோடி ஊழல்.
- பெலிக்ஸ்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic