பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீர் மற்றும் பலுசிஸ்தானில் இருந்து வரும் மனித உரிமை மீறல்களை குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, "ஆக்கிரமிப்பு கஷ்மீர் மற்றும் பலுசிஸ்தானில் பல வருடங்களாக மனித உரிமை மீறல்கள் நடப்பதாக செய்தி வருகின்றது. இது அமெரிக்காவிற்கு பெரும் கவலையை தருகின்றது. அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அமைதியாகவும், அரசியல் ரீதியாகவும் தீர்வு காணப்படவேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம்.
இதற்கு அனைத்து கட்சிகளும் ஒருங்கிணந்து செயல்பட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும். கஷ்மீர் குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பது பாகிஸ்தானிற்கு நன்றாகவே தெரியும்" என கூறியுள்ளது.
பலுசிஸ்தானில் மக்கள் கொல்லப்படுவதாகவும், மக்களின் குரல் ஒடுக்கப்படுவதாகவும் அப்பகுதியின் முக்கிய அரசியல் கட்சி தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிரதமர நரேந்திர மோடியும் தனது சுதந்திர தின உரையின் போது பலுசிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு கஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments