இலங்கை, யாழ்ப்பாணத்தில் மீனவர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் கடல் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இலங்கை கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களின் படகுகள், மீன்பிடி சாதனங்கள் விடுவிக்கப்படவில்லை. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் 130 படகுகளை விடுவிக்க முடியாது.
நாளை மறுநாள் (25-ந் தேதி) முதல் இலங்கை கடல் பகுதியில் இழுவை படகுகளில் மீன்பிடிக்க தடை செய்யப்படுகிறது. இதனை மீறும் மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு, அவர்களின் மீன்பிடி அனுமதி உரிமமும் ரத்து செய்யப்படும்.
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினையை மெதுவாக தான் கையாளவேண்டும். ஏனெனில் இதில் தமிழக அரசியல்வாதிகளின் பங்கு உள்ளது. மீனவர் பிரச்சினை குறித்து இந்திய மற்றும் தமிழக அரசுடன், இலங்கை அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தும் இவ்வாறு அவர் பேசினார்.
இலங்கை கடற்கடையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிப்பது தொடர்பாக அடுத்த மாதம் டெல்லியில் இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என இலங்கை மந்திரி கூறி இருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Write comments