Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 20, 2016

கூட்டாட்சி தத்தவத்தை மோடி அரசு சீர்குலைக்கிறது - மம்தா



மத்திய அரசு கூட்டாட்சி அமைப்பை சீர்குலைத்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, " நரேந்திர மோடியின் மத்திய அரசு கூட்டாட்சி அமைப்பை சீர்குலைத்து நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மாநில அரசுகளின் அதிகாரத்திற்குள் மூக்கை நுழைத்து வருகிறது. இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசு அறிவிப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக எங்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றனர். மத்திய அரசினால் கொண்டு வரப்படும் திட்டங்களும் எதுவும் மாநில அரசுகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மாநில அரசுகள் மீது திணிக்கின்றனர். "கூட்டுறவு கூட்டாட்சி" முறை என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் என்ன என்பது இதுவரை நமக்கு புரியவில்லை" என மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic