Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

தைரியம் இருந்தால் என்னோடு விவாதம் செய்ய வாருங்கள் - அசாசுதீன் உவைசி

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்தும், இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து தன்னோடு விவாதம் செய்ய அனைத்து கட்சிகளுக்கு சவால் விட்டுள்ளா ஐதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாசுதீன் உவைசி.

நேற்றைய தினம் லக்னோவில் தமது கட்சிக்காரர்களின் சந்திப்பின்பொது பேசிய அவர் சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை மோசமானதிலிருந்து மிக மோசமாக மாறிவிட்டது. காங்கிரஸ் கட்சி உட்பட எந்த கட்சியும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவைச்சேர்ந்தவர்கள் என்னை வகுப்புவாத தலைவர் எனவும், நான் பேசும் பேச்சுக்கள் அனைத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் இருக்கிறது என கூறுகின்றனர். அப்படி கூறுபவர்கள் தங்கள் கட்சியின் தலைவர்கள் நாவை முதலில் அடக்கிவைக்கட்டும். இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் சாட்சிகளோடு, தக்க ஆதாரங்களோடு, புள்ளிவிபரங்களோடு என்னோடு விவாதம் செய்ய முன்வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் வகுத்த பங்கு, ஆங்கிலேயே அரசுகளுக்கு எதிராக இஸ்லாமிய மத குருமார்கள் வழங்கிய பத்வாக்களெல்லாம் இன்று வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் இஸ்லாமியர்கள் நம்பினார்கள், ஆனால் அவர்களுகு பிரதிபலனாக கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான். இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்போம் என சொல்லி பிற கட்சிகளில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் ஆஜம்கான், பகுஜன் சமாஜ் கட்சியின் நசீமுத்தீன் சித்தீகி, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் போன்றோர் இஸ்லாமியர்களை அடகுவைத்துவிட்டனர் என உவைசி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஜாதி அரசியலை செய்து வருகிறது. சமாஜ்வாதி என்று அழைப்பதற்கு பதிலாக யாதவவாதி என்று அவர்களை அழைப்பது தான் சரியானதாக இருக்கும். இன்று உத்திரபிரதேசத்தில் மாட்டிற்காகத்தான் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது, மனிதனுக்காக அல்ல என ஒவைசி தெரிவித்தார். தலித்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மோடி பேசிய பேச்சு குறித்த கேட்டதற்கு, தான் ஏற்கனவே உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங்கை சந்தித்து பசுகாவலர்கள் என சொல்லிக்கொண்டு தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பா.ஜ.கவினரே. எனவே வெறும் வார்த்தை ஜாலங்களை விட்டுவிட்டு செயலில் இறங்குங்கள் என தான் தெரிவித்ததாக அசாசுதீன் உவைசி தெரிவித்தார்.

உத்திரபிரதேச தேர்தலில் ஒவைசியின் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி களம் இறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic