Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 16, 2016

அமெரிக்க இராணுவ வீரர் கொலையா...?


ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அமெரிக்க இராணுவ வீரரை தாங்கள் கொன்றுவிட்டதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வரும் அமாக் பத்திரிகை இச்செய்தியினை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அமெரிக்க இராணுவ வீரர் மற்றும் இரண்டு ஆப்கானிஸ்தான் இராணுவ வீரர்களையும் வெடிகுண்டை வெடிக்க செய்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இதனை இங்கிலாந்து பத்திரிகையான யு.கே மிரரும் தெரிவித்துள்ளது. இது தவிற கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருந்த போதிலும் கடந்த 3 வாரங்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் அருகே ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெரும் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 80ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இந்த செய்தியை அமெரிக்க நேட்டோ படைத்தளபதி முற்றிலுமாக மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் பென்டகனில் செய்தியாளர்களிடத்தில் கூறிய ஏடம் ஸ்டம்ப் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளார்.  காபூலில் நடைபெற்ற தாக்குதல் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளைச்சேர்ந்த வீரர்கள் யாரும் அங்கிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic