Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

ஐ.எஸ் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு - மும்பையைச்சேர்ந்தவர் கைது!


ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்தாக மும்பையைச்சேர்ந்த இஸ்லாமிய பிரச்சாரகர் முகமது ஹனீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாவட்டம் காசர்கோடு மாவட்டத்தில் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துவிட்டதாக கூறப்படும் அஷ்பாக் என்பவரின் தந்தை  அப்துல் மஜீத் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது ஹனீப் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஷ்பாக் என்பவர் கடந்த மாதம் முதல் காணாமல் போனார். பின்னர் அவர் தனது தங்கைக்கு அனுப்பிய செய்தியில் தான் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து அப்துல் மஜீத் நகபடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஜாகிர் நாயக் நடத்தும் இஸ்லாமிய ஆராய்சி அரக்கட்டளையின் அர்ஷி குரைஷி மற்றும் அவரது நண்பர் ரிஜ்வான் கான் ஆகியோர் தனது மகனை மூளை சலவை செய்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து அவ்விருவரையும் கொச்சி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்தே மும்பையில் முகமது ஹனீப் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கும் ஜாகிர் நாயக் நடத்தி வரும் அறக்கட்டளைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என மும்பை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic