Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 14, 2016

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு...!


கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 16ஆம் தேதி கடைகள் அனைத்தும் அடைக்கப்படும். லாரி, வேன்கள் ஓடாது என்று சென்னையில் நடந்த பல்வேறு சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காவேரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான வகையில் கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவம், தமிழக பஸ்கள், லாரிகள் எரிப்பு, டிரைவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மீது தாக்குதல் தொடர்பான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். பொது செயலாளர் மோகன் வரவேற்றார். மண்டல தலைவர் சதக்கத்துல்லா, மாவட்ட தலைவர் கே.ஜோதிலிங்கம், எம்.மாரித்தங்கம், என்.டி.மோகன், ஆதிகுருசாமி, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், கூடுதல் செயலாளர் வி.பி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் பி.சுகுமார், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் ராஜ்குமார், சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.ஆனந்தன், தமிழ்நாடு ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.மாரிமுத்து உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் சுமார் 1 மணி நேரம் வரை நடந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பஸ்கள், லாரிகள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன. ஓட்டல்கள் அடித்து நொறுங்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். கன்னடர்கள் தாக்குதலால் ரூ.2000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்பட்ட பாதிப்புக்கு கர்நாடக அரசு முழுமையான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

கர்நாடகாவில் நடைபெற்று வரும் சம்பவத்தை கண்டித்தும், காவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 16ம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும். அன்றைய தினம் பெரியக்கடைகள் முதல் டீக்கடை வரை சுமார் 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும். 11 லட்சம் லாரிகள், வேன்கள், ஓடாது. சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள், ேபருந்துகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கும்படி அவர்களிடம் பேசி முடிவு செய்யப்படும். அவர்கள் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பிரச்னைக்கு முடிவு காணாத பட்சத்தில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கிறோம்.16ம் தேதி ஸ்டிரைக்கிற்கு ஆதரவு தரும்படி அனைத்து கட்சிகளையும் சந்தித்து பேச உள்ளோம்.

கர்நாடகாவில் நடைபெற்று வரும் சம்பவங்களை தேசிய கட்சிகளான பாஜ, காங்கிரஸ் வேடிக்கை பார்க்க கூடாது. தமிழகத்தில் நடைபெறும் ஒரு நாள் போராட்டத்தால் அரசுக்கு ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்படும். சுமார் ரூ.15,000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு ஏற்படும். தமிழக மக்களின் உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு தர வேண்டும்.  போராட்டத்தை புறக்கணிப்பவர்கள் தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் ஆவர். எந்தவகையிலும் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற யாரும் துணைபுரிய  வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக அரசு சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முழு அடைப்பில் 60 லட்சம் வணிகர்கள் பங்கேற்பார்கள்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் சென்னையில் நேற்றிரவு அளித்த பேட்டி: கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளையும் கண்டித்தும், காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசை வலியுறுத்தியும் வருகிற 16ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவு அளிக்கும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்படும். இந்த போராட்டத்தில் 65 லட்சம் வணிகர்கள் பங்கேற்பார்கள். மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணிக்கு கர்நாடக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைெபறும். கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றாவிட்டால் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடைெபறும் என்று கூறினார்.

தியேட்டர்கள், பெட்ரோல் பங்குகள், ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள், பேருந்துகள் ஸ்டிரைக்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.16ஆம் தேதி சுமார் 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும். 11 லட்சம் லாரிகள், வேன்கள், ஓடாது. தமிழகத்தில் நடைபெறும் ஒரு நாள் போராட்டத்தால் அரசுக்கு ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்படும். சுமார் ரூ.15,000 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic