கேரளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் மாயமான 6 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர், ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமை சென்றடைந்துவிட்டனர் என்று தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கேரள மாநிலத்தின் காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் இருந்து மாயமான இவர்கள், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை நகர விமான நிலையங்களில் இருந்து குவைத், துபை, மஸ்கட், அபுதாபி ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் ஈரான் வழியாக ஆப்கானிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர்.
இந்தத் தகவல்களை, தில்லி விமான நிலையத்தில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு கடந்த மாதம் 1-ஆம் தேதி தப்ப முயன்றபோது பிடிபட்ட யாஸ்மின் முகமது ஜாகித் (29) என்ற பெண் கூறினார்.

இவர், அப்துல் ரஷீத் (30) என்பவரை கடந்த மே மாதம் தொலைபேசி வழியாக திருமணம் செய்துகொண்டார். பிறகு, ஐ.எஸ். அமைப்பை ஆதரிக்கும் விடியோக்கள், குறுந்தகவல்கள் ஆகியவற்றை செல்லிடப்பேசி செயலி வழியாக யாஸ்மினுக்கு அப்துல் ரஷீத் அனுப்பி வந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில், தானும், கேரளத்தில் மாயமான மற்றவர்களும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத முகாமை (காலிபா) சென்றடைந்துவிட்டதாக யாஸ்மினிடம் அப்துல் ரஷீத் கூறியுள்ளார்.
யாஸ்மின், ஆப்கானிஸ்தான் செல்வதற்கான பயண ஏற்பாட்டுச் செலவுக்காக, அப்துல் ரஷீத் தனது முதல் மனைவி ஆயிஷாவின் வங்கி ஏடிஎம் அட்டையைக் கொடுத்திருக்கிறார். அந்த அட்டையைப் பயன்படுத்தி, ரூ.1.5 லட்சம் செலவில் ஆப்கானிஸ்தான் செல்வதற்கு யாஸ்மின் விமான டிக்கெட் எடுத்திருக்கிறார்.
இதனிடையே, கேரளத்தில் இருந்து மாயமான டாக்டர் ஐஜாஸ் என்பவரின் மனைவிக்கு கடந்த 6-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.

No comments:
Write comments