கஷ்மீரில் 10 மாவட்டங்களில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு வன்முறையால் பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது.
கஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 9–ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
இந்த நிலையில் பிரிவினைவாதிகள் உள்ளூரில் உள்ள ஐ.நா. சபை அலுவலகங்களுக்கு பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்று முற்றுகையிடும்படி அழைப்பு விடுத்தனர். இதனால் கஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் 72 மணி நேரத்துக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதேநேரம், நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் அருகில் உள்ள மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவின்போது புதிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக இராணுவ ஹெலிகாப்டர்களும், ஆள் இல்லாத குட்டி விமானங்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
பந்திபோரா நகரில் வன்முறையாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டும் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதில் 20 வயது மொர்தசா அகமது என்பவர் பலியானார்.
இதேபோல் சோபியான் மாவட்டத்தில் போன்போராவில் படை வீரர்களுக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஷாகித் அகமது என்பவர் உயிர் இழந்தார். இதனால் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்தது. நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த மோதலில் 50–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கஷ்மீரில் சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ்காரர் ரவுஸ் அகமது சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.

No comments:
Write comments