கஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபது புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அங்கு மிகப்பெரும் வன்முறைவெடித்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடைபெற்றும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் எவ்வளவோ முயன்றும் இதுவரை எந்த பலனும் இல்லை. இதுவரை கஷ்மீர் வன்முறையில் 72 பேர் மரணித்துள்ளனர். எழாயிறத்திற்குமேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குல்கம் மாவட்டத்தில் வன்முறையில் இறந்துபோனவர்களின் குடும்பத்தினர்களை மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். கஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அனைவரும் போராட வேண்டுமென தான் கேட்டுக்கொண்டதாக மெஹ்பூபா தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களோடு எடுத்து புகைப்படங்களையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மெஹ்பூபா வெளியிட்டுள்ளார்.

No comments:
Write comments