Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

உலக பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் மாவோயிஸ்டுகளுக்கு 4வது இடம்


உலகிலேயே கொடூர பயங்கரவாத தாக்குதல்களை  நிகழ்த்தி வரும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் இந்தியாவில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டு இயக்கம் நான்காவது இடத்தில் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச்சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளின் ஆய்வுக்கான தேசிய கூட்டமைப்பு தெரிவித்தள்ளதாவது, உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பயங்கரவாத வேரூன்று பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் அதி பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலில் முதல் இடத்தில் இருப்பது தாலிபான் பயங்கரவாத அமைப்பு என்றும், ஐ.எஸ் மற்றும் போக்கோ ஹரம் ஆகிய அமைப்புகள் அடுத்தடுத்த இடத்தில் இருப்பதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கம்யூனிச கொள்கையை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் மாவோயிஸ்டு அமைப்பு நான்காவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, உலகம் முழுவதும் கடந்த 2015ஆம் ஆண்டில் 11,774 பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் அதில் அதிகம் பாதிகப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்பு குறைவுதான் என கூறப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இந்தியாவி 791 பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் அதில் 43% தாக்குதல்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய 343 தாக்குதல்களில் 176 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.  இதில் சண்டிகர் மாநிலத்தில்  21%, மணிப்பூர் மாநிலத்தில் 12%, ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் 11%, ஜார்கண்ட் மாநிலத்தில் 10% பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

சண்டிகர் மாநிலத்தில் மட்டும் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் 76 முறை தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் கடந்த 2015 ஆண்டு மட்டும் 167 தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர். இதே போல பிணை கைதிகளாக கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை கொல்லப்பட்ட நபர்களின் விகிதாச்சாரத்தை விட மூன்று மடங்கு அதிகம். கடந்த 2015ஆம் ஆண்டு கடத்தப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 862, இதில் மாவோயிஸ்ட் அமைப்பினரால் மட்டும் 707 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இது கடந்த 2014ஆம் ஆண்டை விட 400 பேர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய உள்துறை அமைச்சகம் இந்த ஆய்வுக்கருத்திற்கு ஒத்துபோகிற வகையிலேயே தங்களது புள்ளி விபரத்தையும் வெளியிட்டுள்ளது. நக்ஸல் அமைப்பினரால கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 802 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது.

உலகலாவிய அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்ட புள்ளி விபரங்கள் வருமாறு,

தாலிபான் அமைப்பு சார்பாக மொத்தம் 1093 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 4512 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினரால் மொத்தம் 931 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் 6050 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போக்கோ ஹரம் 491 தாக்குதல்களை நடத்தி 5450 பேரை கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic