Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

50 பொது இடங்களில் இலவச வைஃபை : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


தமிழகத்தில் பெரிய பஸ் நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 பொது இடங்களில் ’அம்மா வைஃபை மண்டலம்’, 50 பள்ளிகளில் இலவச வைஃபை வசதி மற்றும் இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தகவல் தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் சென்றடைய பல்வேறு புதிய திட்டங்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்படுகின்றன.

தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுக்காக சென்னை டைடல் பார்க் முதல் தளத்தில் 6 ஆயிரத்து 860 சதுரடியில் 90 இருக்கை வசதி கொண்ட தொழில்முனைவோர் மையம் நிறுவப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 2-ம் நிலை நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி இந்தாண்டு கோவை டைடல் பார்க்கில் வாடகைக் கட்டிடத்தில் ரூ.2 கோடி முதலீட்டில் 50 இருக்கைகளுடன் கூடிய தொழில் முனைவோர் மையம் அமைக்கப்படும். இம்மையத்துக்கு நாஸ்காம் நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.

அம்மா வைஃபை மண்டலம்:

தேர்தல் அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள பெரிய பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் வைஃபை எனும் கம்பியில்லா இணையதள வசதி கட்டணமின்றி வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில், முதல்கட்டமாக பெரிய பஸ் நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வைஃபை மண்டலம்’ ஏற்படுத்தப் படும். இந்த இடங்களில் கம்பியில்லா மற்றும் கட்டணமில்லா இணைய வசதி ஏற்படுத்தப்படும்.

மேலும், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டணமில்லா இணைய வசதி செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்கட்டமாக 50 பள்ளிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இவை ரூ.10 கோடியில் நிறுவப்படும். இச்சேவையை நல்ல முறையில் தொடர்ந்து வழங்க ஆண்டுதோறும் ஏற்படும் செலவுக்கு ரூ.1.50 கோடி வழங்கப்படுகிறது.

சிறு, குறு, தொழில்முனைவோர் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அது சார்ந்த வணிகத்தை சென்னையில் தொடங்க, சோழிங்கநல்லூரில் உள்ள எல்கோ சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2 லட்சம் சதுரடி பரப்பில், தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ரூ.80 கோடியில் கட்டப்படும்.

இ-சேவை மையங்களில் ஆதார்:

தேசிய மக்கள் தொகை பதிவு ஆவணத்தில் இருந்து பெறப்படும் குடிமக்களின் உயிரியத் தகவலுடன் கூடிய தனி நபர் தகவல் தொகுப்புடன், ஆதார் எண்களை ஒருங்கிணைத்து மாநில குடியிருப்போர் தகவல் தொகுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய பொது அடையாள எண் ஆணையகம் ஆதார் பதிவுகளை மேற்கொள்ளும் பதிவாளராக தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையை அங்கீகரித்துள்ளது. ஆதார் பதிவுகளை மேற்கொள்ளவும், மாநில மக்கள் தொகை பதிவேட்டை பராமரிக்கவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநிலம் முழுவதும் 650 நிரந்தர பதிவுமையங்கள் அமைக்கப்படும். இந்த பதிவு மையங்களை, தமி்ழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மி்ன்னணு நிறுவனம் ஆகியவை பராமரிக்கும்.

முதல் கட்டமாக இப்பதிவு மையங்கள் சென்னை மாநகராட்சி மற்றம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தாலும். மாவட்ட ஆட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சென்னை நீங்கலாக இதர மாநகராட்சிகளில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இ-சேவை மையங்களில் நிறுவப்படும். ஆதார் அடிப்படையிலான பல்வேறு வகையான அட்டைகள் வழங்கும் பணியும் இம்மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.25 கோடி செலவிடப்படுகிறது.

தமிழக அரசின் சேவைகள், சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக பொதுமக்களுக்கு இணையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெருவாரியான மக்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுள்ள கைபேசிகளை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அரசு சேவைகளை கைபேசி செயலிகள் வாயிலாக அளிக்கும் வகையில், அம்மா இ-சேவை என்ற திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 25 முக்கிய சேவைகள் இத்திட்டத்தில் வழங்கப்படும். இந்த கைபேசி செயலி திட்டத்துக்கு ரூ.ஒரு கோடி செலவிடப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும், வாடகைக் கட்டிடங்களில் இயங் கும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, மின் ஆளுமை இயக்கு நரகம் மற்றும் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் ஆகியவற்றுக்கு தமிழ் இணைய கல்விக் கழக இடத்தில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரசு சேவைகளை கைபேசி செயலிகள் வாயிலாக அளிக்கும் வகையில், அம்மா இ-சேவை என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic