யாகூ (Yahoo) இணையத்தளத்தை ஊடுருவி சுமார் 500 மில்லியன் கணக்குகளிலிருந்து தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனை யாகூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஊடுருவல் அரசாங்க ஆதரவுடன் நடைபெற்றிருக்கலாம் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வல்லுநர்கள் அந்த ஊடுருவல்தான் இதுவரை நடத்தப்பட்ட இணைய ஊடுருவல்களிலேயே மிகவும் மோசமானது என கூறியுள்ளனர்.
மேலும் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், பிறந்த நாள், கடவுச் சொற்கள், இணையக் கணக்கு தொடர்பான பாதுகாப்பு கேள்வி-பதில்கள் ஆகிய தகவல்கள் திருடப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளின் தொடர்பில் கண்டுபிடிப்பதற்கு யாகூ இணையத்தளத்தை பயன்படுத்துவோர் தங்கள் கடவுச்சொற்களையும், பாதுகாப்புக் கேள்வி-பதில்களையும் மாற்றிக்கொள்ளும்படி குறித்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
எனினும் வங்கிக் கணக்குத் தகவல்கள், வங்கி அட்டை குறித்த தகவல்கள் போன்றவை திருடப்பட்ட தகவல்களில் இல்லை என்று நம்பப்படுவதாக யாகூ நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments