கர்நாடகாவில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து அங்கிருந்து தமிழர்கள் வெளியேறியதால் அங்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
காவிரி பிரச்சினையால் கர்நாடகத்தில் கடந்த 12-ந் தேதி வன்முறை வெடித்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன்னட அமைப்பினர் போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். தமிழக பதிவு எண் கொண்ட பஸ்கள், லாரிகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன. பெங்களூரில் கடந்த 12-ந்தேதி நடந்த கலவரம் மற்றும் வன்முறை காரணமாக இங்கு வசித்து வந்த தமிழர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.
10 லட்சத்துக்கும் மேலான தமிழர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கர்நாடகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணி உள்ளிட்ட அனைத்து தொழில்களும் ஆட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன. பிணம் எரிக்க ஆள்இல்லை பெங்களூரில் உள்ள கல்லறை மற்றும் சுடுகாடுகளில் பணியாற்றி வந்த தமிழகத்தை சேர்ந்தவர்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் பெங்களூர் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பிணங்கள் அடக்கம் செய்யப்படாமலும், எரிக்கப்படாமலும் கிடக்கின்றன. மேலும் ஒட்டு மொத்த தொழில்களுமே கர்நாடகாவில் முடங்கி உள்ளன.
மண்டியாவில் உள்ள தமிழர்கள் நேற்று கர்நாடகத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியா டவுன் பகுதியில் காலி குடங்களுடன் திரண்ட தமிழர்கள் தமிழகத்திற்கு எதிராகவும், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள், “கன்னடர்களும், கர்நாடகத்தில் உள்ள தமிழ் மக்களும் ஒன்றாகத் தான் வாழ்ந்து வருகிறோம். சகோதரத்துடன் பழகி வருகிறோம். ஆனால் தமிழ்நாடு ராமேசு வரத்தில் கன்னடர் ஒருவர் மீது தமிழக மக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள கர்நாடக சங்கங்கள், கன்னடர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள், கடைகள் ஆகியவற்றை அங்குள்ள தமிழக மக்கள் தாக்கி வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இல்லை. குறிப்பாக காவிரியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீர் இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை போக்கும் அளவில் மட்டுமே உள்ளது. அதை வைத்து விவசாயம் செய்ய இயலாது.
ஆனால் தமிழ்நாட்டில் விவசாயம் செய்வதற்காக காவிரியில் தண்ணீர் வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டு பெற்றுள்ளார். ஏற்கனவே வறட்சியினால் மண்டியாவில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனவே, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கேட்கக் கூடாது. காவிரி கர்நாடகத்துக்கே சொந்தம்” என்று கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Write comments