Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

கோயிலுக்கும் போவேன், மசூதிக்கும் போவேன், அது என் இஷ்டம்...‍! நீங்கள் யார் அதை கேட்க...?


கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதால் நான் முஸ்லிம் அல்லாதவளாகி விடமாட்டேன் என பிரபல பாலிவுட் நடிகை சோகா அலி கான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகையான சோகா அலி கான் பஞ்சாப் அம்ரிஸ்டரிலுள்ள தங்க கோயில் மற்றும் கணபதி கோயிலுக்குச்சென்று வழிபாடு நடத்தினார். இதன் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இதனை பார்வையிட்ட சிலர் சோகா அலிகானை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசிய அவர் கூறியிருப்பதாவது,

"இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொருவரும் தனது கருத்தை வெளியிடுவதற்கு அனுமதி உள்ளது. கோயிலுக்குச்சென்று வழிபடுவதால் நான் ஒன்றும் முஸ்லிம் அல்லாதவளாகிவிடமாட்டேன். என்னை அவ்வாறு விமர்சிப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. நான் தொழுகைக்கும் போறேனா அல்லது சர்ச்சுக்கு போறேனா என்பது பற்றிய கவலை உங்களுக்கு தேவை இல்லை. அது உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. என்னை யாரும் கட்டுபடுத்த முடியாது. இந்திய மதச்சார்பற்ற நாடு. எல்லோருடைய பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். 








 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic