கடந்த 2006ஆம் ஆண்டில், அப்போதைய மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா தலைமையிலான இடதுசாரி அரசு, நிலம் கையகப்படுத்துவதில் சிறப்புத் திட்டங்கள் கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின்கீழ் சிங்கூர் என்ற இடத்தில், டாடா நிறுவனம் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தியது. இதை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார். நில ஆக்கிரமிப்பு பகுதிக்கு விவசாயிகளுடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து, அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பையடுத்து பேசிய மம்தா பானர்ஜி “உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, சிங்கூரில் 9,117 விவசாயிகளின் நிலங்கள் புதன்கிழமை அவர்களிடம் திருப்பி அளிக்கப்படும்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலங்கள் சர்வே எடுக்கப்பட்டு எல்லைகள் குறிக்கப்பட்டு விட்டன. அதன்படி, அனைத்து விவசாயிகளுக்கும் நில ஆவணங்கள் வழங்கப்படும். அந்த நாள் ‘சிங்கூர் தினம்’ என்று அறிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட இடத்தில் டாடா நிறுவனம் சார்பில் சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அகற்றும்படி கோரியுள்ளோம். அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் மாநில அரசே நடவடிக்கை எடுக்கும்” என்றார். உச்சநீதிமன்றம் நிலத்தை திருப்பிக் கொடுத்த 12 வாரங்கள் கால அவகாசம் வழங்கியநிலையில், மம்தா சொன்னபடி 9,117 உரிமையாளர்களுக்கு அவர்களுடைய நிலங்களின் ஆவணங்களை திரும்ப மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்துவிட்டார். மேலும் மொத்தமாக 997 ஏக்கர் நிலமும், ஏழு முதல் எட்டு வாரங்களுக்குள் அதன் உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
“கடந்த காலத்தில் செய்த தவறை சரிசெய்யும்விதமாக, நிலத்தை இழந்த விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் மீண்டும் விவசாயம் செய்யத் தொடங்கும்விதமாக ரூபாய் பத்தாயிரம் நஷ்ட ஈடு கொடுப்போம். மேலும் கால இழப்பைக் கருத்தில்கொண்டு அதற்கு ஈடாக வேளாண்மை செய்யத் தேவையான பொருட்களையும் கருவிகளையும் வாங்கிக்கொள்ள வசதிகள் செய்து கொடுப்போம். மொத்தம் 997 ஏக்கர் நிலமும் மீண்டும் விளைநிலமாக மாற்றப்படும். நீர்ப் பாசன வசதிகள் செய்து தரப்படும்.

டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்காக எடுத்துக்கொண்ட நிலம் பெரும் நீர்ப்பாசன வசதிகள் உடைய நிலம். தொழிற்சாலைக்காக நிலங்களை அபகரித்துக்கொண்டதால் 13,000 பேர் பாதிக்கப்பட்டனர். என் அரசியல் வாழ்வில் இதைவிட மகிழ்ச்சியான இன்னொரு நாள் இனி வரப்போவதில்லை” என்றார் மம்தா பானர்ஜி.
No comments:
Write comments