Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

சென்னையில் குற்றவாளிகள் வேட்டை..!


சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் போலீஸார் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

கண்காணிப்பு மற்றும் இரவு நேர ரோந்து பணியும் காவல்துறையினர் தற்போது தீவிரபடுத்தியுள்ளனர். சென்னை முழுவதும் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்திய சோதனையில் சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 387 பேரையும், குற்ற பின்னணி கொண்ட 3 ரவுடிகளையும் கைது செய்துள்ளனர்.

மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 60 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை மாநகரில் இரவு நெரங்களி அதிக அளவில் குற்றச்செயல்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக இரவு நேர சினிமா காட்சிகள் முடிந்துவிட்டு வீடு திரும்புவோரை குறிவைத்து குற்றங்கள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic