Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

அமெரிக்காவின் வளர்சியில் இந்து சமுதாயத்திற்கு பெரும் பங்கு! - டிரம்ப் புகழாரம்

trump praises hindu community in america

உலக நாகரீகத்தின் வளர்சிக்கும் அமெரிக்காவின் வளர்ச்சிக்கும் இந்து சமுதாய மக்களின் பங்கு அளப்பறியது, என‌ அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அடுத்த மாதம் (அக்டோபர்) 15ஆம் தேதி அமெரிக்காவின் நியுஜெர்சி மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் பிரம்மாண்ட கூட்டம் நடைபெறவிருக்கிறது. குடியரசு-இந்துமத கூட்டணி என்கிற பெயரில் மாபெரும் பேரணி நடைபெறப்போவதாகவும் அதில் அமெரிக்காவில் வசித்து வரும் அனைத்து இந்துக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஒரு 24 நொடிகள் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில் இந்து சமுதாயத்தை தாம் மிகவும் மதிப்பதாகவும், உலக நாகரீகத்தின் வளர்ச்சிக்கு அது மிகப்பெரும் பங்காற்றியிருப்பதாகவும் பெருமிதமாக கூறினார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் டொனால்ட் டிரம்ப் கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக மூத்த நடிகர்கள், நடனக்கலைஞர்கள், பாலிவுட் பாடகர்கள், இந்து மத தலைவர்கள், என அனைவரையும் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.  இந்து மத பண்பாடு மற்றும் பாரம்பரியம் தொடர்பான கொண்டாட்டங்களில் பங்கேற்க அவர்கள் அனைவருக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்நிகழ்சியின் மூலமாக பயன் பெறுவார்கள் என இந்நிகழ்ச்சிக்கான பிரச்சாரத்தில் கூறப்பட்டு வருகிறது. இது தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்று கூட்டப்பட்ட மனித கூட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குடியரசுக் இந்து மதம் கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஷல்லி குமார் தெரிவித்துள்ளார்.

என்னுடைய நண்பர் ஷல்லி குமாரோடு இணைந்து இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்கெடுப்பதில் பெரும் கொள்கிறேன் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய கமிட்டியின் ஆலோசகராக டொனால்ட் டிரம்ப் ஷல்லி குமாரை கடந்த ஞாயிற்றுகிழமை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் இந்திய-அமெரிக்கர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இதுவே முதல் முறை. அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய அமெரிக்கர்களின் பங்கு கணிசமாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் நம்புகிறார்.
இதே போன்று மற்றொரு வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனும் இந்திய அமெரிக்கர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். எனினும் அவருடைய சந்திப்பு அனைத்தும் உள் கூட்டங்களாகவே இருந்ததே தவிர பொதுக்கூட்டங்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic