Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

சடலத்தின் கழுத்தில் கைற்றை கட்டி இழுத்துச்சென்ற கொடூரம்!




பீகார் மாநிலத்தில் இறந்தவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி போலீசார் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்பதை பெருமையாகவே சொல்லிக்கொள்ளலாம். அடப்பாவமே! செத்தால் கூட கஷ்டம்தான் போல...

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் செல்லும் கங்கை ஆற்றில் ஒருவரது சடலம் காணப்பட்டது. இதுகுறித்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அந்தப் பிணத்தை இழுத்து கரையில் சேர்த்த இரண்டு மணி நேரம் கழித்தே போலீசார் அங்கு வந்தனர். ஆம்புலன்ஸ் அல்லது வேறு வாகனங்கள் எதுவும் வரவழைக்கப்படவில்லை.

மாறாக, போலீசார் அந்தப் பிணத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டி, மனிதாபிமானம் இன்றி தரையில் இழுத்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து, சமூக வலைதலங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானத்தை அடுத்து பிணத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற போலீசார் இருவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் ஓடிஸா மாநிலத்தில் இறந்த தனது மனைவியை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டு, மனைவியின் பிணத்தை கணவர் தோளில் சுமந்து சென்ற சம்பவம் உலக அளவில் நாட்டிற்கு அசிங்கத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இந்த அவலமும் நடந்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic