சவுதி அரேபியாவிற்கான இங்கிலாந்து தூதர் தன்னுடைய மனைவியுடன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும், இவ்வருடம் ஹஜ் புனித யாத்திரை கேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபியாவிற்கான இங்கிலாந்து தூதுவராக செயல்பட்டு வருபவர் கொல்லிஸ் இவர் சவுதி அரேபியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டதிலிருந்து அந்நாட்டு தலை நகர் ரியாதில் வசித்து வந்திருக்கிறார். இவர் தனது மனைவி ஹுதா முஜார்க்குடன் கடந்த 2011 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும், இவ்வருடம் மெக்காவிற்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனை சவுதி அரேபியாவைச்சேர்ந்த பெண் எழுத்தாளர் பவுஜியா அல் பக்ர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். கொல்லிஸ் ஹஜ் யாத்திரிகள் போல வெள்ளை நிற துணி அணிந்து கொண்டு தனது மனைவியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். அதில் கொல்லிஸ் புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்ட முதல் பிரிட்டிஷ் தூதுவர் என்றும், அவருக்கும் அவரது மனைவிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதனை கொல்லிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இஸ்லாமியர்களுடன் 30 ஆண்டு காலம் ஒன்றாக வாழ்ந்ததாகவும், இதனால் தான் இஸ்லாம் மதத்தால் ஈர்க்கப்பட்டு மதம் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நன்றி: டெக்கன் குரோனிக்கல்

No comments:
Write comments