ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி பேரளிவாளனை தாக்கிய கைதி வேலூர் சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி பேரறிவாளனுடன் ஏற்பட்ட தகராறில் அவரை இரும்புக் கம்பியால் ராஜேஷ் கண்ணா என்ற கைதி தாக்கினார். இதில் பேரறிவாளனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு பதற்றமடைந்த ராஜேஷ் கண்ணா இரத்த அழுத்த மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
சிறை மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, சம்பவம் தொடர்பாக இருவரிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ராஜேஷ் கண்ணாவ கடலூர் மத்திய சிறைக்கும், இவருக்கு உதவி செய்த செல்வம் என்ற நபரை சேலம் சிறைக்கும் பலத்த பாதுகாப்புடன் மாற்றியுள்ளனர்.

No comments:
Write comments