Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 14, 2016

உலகின் உயரமான கட்டிடத்தில் வீடு வைத்திருக்கும் ஒரே இந்தியர்...!



உலகின் மிக உயர்ந்த கட்டிடம் துபாயில் உள்ள பூர்ஜ் கலிபா, இதில் 22 அற்புதமான வீடுகளை மெக்கானிக்காக இருந்து தொழிலதிபராக மாறிய ஒரு இந்தியரிடம் உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

இந்தக் கட்டிடத்தில் அதிகப்படியான வீடுகளை உடையவரும் இவர்தான் என்று காலீஜ் டைம்ஸ் என்ற நாளிதழ் ஜார்ஜ் வி நேரேபரம்பிளின் பேட்டியை வெளியிட்டுள்ளது. ஜார்ஜ் வி நேரேபரம்பிள் இந்தப் பேட்டியில் கூறும்போது நான் இந்த 22 வீடுகளோடு நிறுத்தப் போவதில்லை, இன்னும் நல்ல விலைக்கு வீடுகள் வரும்போது வாங்கத்தான் போகிறேன் என்று கூறியுள்ளார்.

நல்ல விலைக்குக் கிடைக்கும் போது கண்டிப்பாக வாங்குவேன். "நான் கனவு காண்பவன், தொடர்ந்து கனவு காண்பேன்" என்று பேட்டியில் தெரிவித்துள்ளார். கேரளாவில் பிறந்த ஜார்ஜ் வி நேரேபரம்பிள் உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் அதிக வீட்டை வைத்திருக்கும் ஒரு பெரிய தனிநபர் உரிமையாளராக உள்ளார்.

இன்று இந்த நிலைக்கு இருபதர்க்கு இவரை உறவினர் விளையாட்டுக்காக உன்னால் 828 மீட்டர் உள்ள பூர்ஜ் கலிபாவில் கால் கூட எடுத்து வைக்க இயலாது என்று கூறியதே பெரிய காரணமாக இருந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு பூர்ஜ் கலிபாவில் வீடு வாடகைக்குக் கிடைக்கும் என்ற விளம்பரத்தைப் பார்த்த அடுத்த நாளே அந்த வீட்டிற்கு வாடகை செலுத்தி வசிக்க துவங்கி உள்ளார்.

6 வருடங்கள் கழித்து இன்று 900 குடியிருப்புகள் உள்ள இந்தக் கட்டிடத்தில் 22 வீடுகளை தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறார். மேலும் இதில் 5 வீட்டை வாடகைக்கு அளித்துள்ளதாகவும், மீதம் இருக்கும் வீடுகளையும் வாடகைக்கு விட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு முதன் முதலாக மிகவும் வெப்பமான பகுதியான சார்ஜாவில் குளிர் சாதன பொருட்கள் ஏசி போன்றவற்றை விற்கச் சென்ற இருக்கிறார் ஜார்ஜ் வி நேரேபரம்பிள்.

இவருடைய 11 வயதிலேயே தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருந்தது மட்டும் இல்லாமல் குப்பையை பணமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறார். இவரது ஊரில் பருத்தி ஏற்றுமதி செய்து வருபவர்களில் பலர் பஞ்சை மட்டும் பிரித்து எடுத்துவிட்டு அதில் உள்ள கொட்டையை குப்பையில் போட்டுள்ளதை பார்த்த இவர் அதில் இருந்து பசை எடுத்து லாபம் பார்த்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் புளியங்கொட்டை விதைகள் போன்றவற்றை சேகரித்து அதைக் கால்நடை தீவனங்களுக்காக விறைப்பன செய்துள்ளதாக தன்னுடைய கடந்த காலத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic