கேரளா மா நிலம் முழுவதும் இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயில் மற்றும் திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மனாப சாமி கோயில்கள் உட்பல பல கோயில்களில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
முன்னர் கேரளாவை ஆண்ட மன்னர் மஹாபலியின் நினைவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் மஹாபலியின் ஆட்சியில் சுபிட்சமாகவும், நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்துள்ளனர். ஓணம் தினமான திரு ஓனம் தினத்தில் தான் விஷ்ணு பகவான் தனது ஐந்தாவது அவதாரமான வாமனா அவதாரத்தை மேற்கொண்டு கேரள வந்தார் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால் இவ்வருடம் ஓணம் கொண்டாட்டத்தை வேறு ஒரு கண்ணோட்டமாக கூறியுள்ளது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக ஓணம் பண்டிகையை வாமனா ஜெயந்தி என்று கூறியதும் பா.ஜ.க தலைவர் ஓணம் பண்டிகையை வாமனா ஜெயந்தி வாழ்த்துக்கள் என்று கூறியதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மக்களை பொறுத்தவரை ஓணம் தினத்தை மன்னர் மஹாபலிக்காக அற்பணித்துள்ளனர். அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவின் வாழ்த்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஓணம் பண்டிகையானது அனைவருக்கும் பொதுவானது, இதில் ஜாதி மதம் பேதமில்லை. இந்த பண்டிகையானது சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தக்கூடிய ஒன்றாகும் என பிணராயி விஜயன் தெரிவித்தார். இதனை தவறாகவும் வரலாற்றை திரித்து கூறுவதும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும் என பிணராயி விஜயன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில தலைவர் சுதீரன் மற்றும் ரமேஷ் சென்னிதாழா ஆகியோர் கூறும்போது "ஓணம் பண்டிகை தொடர்பான அமித்ஷாவின் கருத்தை கேரள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். " என தெரிவித்தனர். அதே சமயம் பா.ஜ.கவின் கேரள தலைவர் ராஜசேகரன் கூறும்போது இத்தகைய விமர்சனங்கள் தேவையில்லாதது. அமித்ஷா மக்களுக்கு வாழ்த்துக்களைத்தான் கூறியுள்ளார். இன்று இந்தியாவின் பல இடங்களிலும் வாமனா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கொச்சியில் இருக்கும் திரிக்கரா கோயிலிலும் வாமனா ஜெயந்தி கொண்டாடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

No comments:
Write comments