உரி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, மும்பையில் உள்ள பாகிஸ்தான் நாட்டு பாடகர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதனை மறுத்துள்ளது.
இந்த சம்பவத்தால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மும்பையில் பாகிஸ்தான் கலைஞர்கள் நிகழ்ச்சி நடப்பதற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறியுள்ளது. அக்கட்சியின் துணை அமைப்பு வெளியிட்ட செய்தியில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். தவறினால் எம்.என்.எஸ். கட்சியினர் அவர்களை வெளியேற்றுவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது பாகிஸ்தானுடனான உறவை இந்தியா உடனடியாக முறித்துக்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் கலைஞர்கள், விளையாட்டு வீரர்களை இங்கு அனுமதிக்கக்கூடாது. சர்வதேச அளவில் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என நாம் கூறி வரும் நிலையில், தொடர்ந்து அவர்களுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தூதரக ரீதியிலான உறவை ஏன் தொடர வேண்டும். பாகிஸ்தான் ஒரு தேசமல்ல. அது பயங்கரவாதிகளின் கூடாரம். எனவே அந்நாட்டுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளின் எச்சரிக்கை காரணமாக பாகிஸ்தான் கலைஞர்களுக்கு மும்பை போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

No comments:
Write comments