Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

சசிகலா திடீர் ஆலோசனை!


முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று காலையிலும் முதல் ஆளாக வந்தவர் அமைச்சர் உதயகுமார்தான். அதன் பிறகு ஒவ்வொரு அமைச்சராக வர ஆரம்பித்தனர். 

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மருத்துவமனைக்கு வந்ததும் அவரோடு நீண்ட நேரம் பேசியபடியே நின்றிருந்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இரண்டாவது தளத்தில் இருந்து கீழே வந்த சசிகலா, அவர்கள் இருவரிடமும் ஏதோ பேசிவிட்டு மீண்டும் மேலே சென்று விட்டார். அமைச்சர்கள், எம்.பிக்கள் தவிர மற்ற நிர்வாகிகள் யாரையும் மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கவில்லை. 

முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உட்பட பலரும் மருத்துவமனை வளாகத்துக்கு வெளியேதான் நிற்கிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், நேரம் ஆக ஆக கட்சித் தொண்டர்கள் கிரீம்ஸ் ரோட்டில் குவிந்தபடி இருக்கிறார்கள். 

இன்று ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருவதை தொடர்ந்து, அவரைப் பார்க்கலாம் என்ற ஆவலில்தான் கூட்டம் வர தொடங்கியுள்ளது. ஆனால், டிஸ்சார்ஜ் பற்றி இதுவரை மருத்துவமனை நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic