இலங்கை தமிழர்கள் 20 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இலங்கையில் அனுராதாபுரம் சிறையில் 20 இலங்கை தமிழர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் 20 பேரும் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 21ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தங்களை விடுதலை செய்ய தாமதமானால் உறவினர்கள் எளிதாக சந்திக்க யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும் தங்கள் வழக்குகளை வவுனியா அல்லது யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே சிறைத்துறை அதிகாரிகள், உண்ணாவிர போராட்டம் நடத்தும் சிலரை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற கருத்தில் கொண்டிருப்பதாக கூறிஉள்ளனர்.
இதனிடையே இலங்கை சிறைகளில் சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டு உள்ள இலங்கை தமிழர்கள் 96 பேரில் 23 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அந்நாட்டு மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி வரவேற்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் மற்ற தமிழர்களையும் காலதாமதம் இன்றி விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

No comments:
Write comments