பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கு தற்போது இடமில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இதுபோன்று செயல்பட்டு வரும் பாகிஸ்தானுடன், கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கு இடமில்லை. இந்த ஆண்டு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடும் வகையில், இந்திய அணிக்கு போட்டி அட்டவணை எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியும்ட்டன் இனி கிரிக்கெட் விளையாடப்போவதில்லை!ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்குமிடையே பிரச்சனைகள், மோதல்கள் ஏற்படும் போது அந்தந்த நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
விசா வழங்க மறுப்பது, தூதரகத்தின் தூதரை திரும்ப பெற்றுக்கொள்வது, இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறைவை முறித்துக்கொள்வது, பொருளாதார தடை விதிக்க பரிந்துரை செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பிரச்சனை ஏற்படும் போது உச்ச கட்ட நடவடிக்கையாக இந்தியா எடுப்பது பாகிஸ்தான் நாட்டு அணியுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்பதே.

No comments:
Write comments