Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 14, 2016

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக திருனாவுக்கரசர் நியமனம்..!


 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ், 41 இடங்களில் போட்டியிட்டது.தி.மு.க. 176 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது கட்சி மேலிடத்தில் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இது பற்றி அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதையொட்டி டெல்லி சென்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராகுல் காந்தியை சந்தித்து தேர்தல் பற்றி விவரமாக கூறினார். அதை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பு ஏற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார்.

இதன் பிறகு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால்,தலைமை இல்லாமல், 4 மாதங்களாக கட்சி செயல்பட்டு வந்தது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என தொண்டர்கள் கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வந்தனர். புதிய தலைவர் பதவிக்கு சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ் என பலரது பெயர்கள் வெளியாகி வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜானார்தன் திரிவிவேதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரஸ் தலைவராக தன்னை நியமித்ததற்கு சோனியாவுக்கும், ராகுலுக்கும் திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்துள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இளங்கோவன், திருநாவுக்கரசர் கட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும். தொண்டர்களை ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic